2019 நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த கோரிக்கை - Agnipuratchi

2019 நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த கோரிக்கை

Share This

2019 நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் 17 அரசியல் கட்சிகள் வலியுறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்னணு வாக்குசீட்டு முறையால் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. மேலும் பல்வேறு நீதிமன்றங்களில் இது தொடர்பாக வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், வாக்குஎண்ணிக்கையில் அதிக வித்தியாசங்கள் தெரிவதால், வருகின்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்றி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்த 17 கட்சிகள் முடிவு செய்துள்ளன. இது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages