அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் வீடுகளில் -லஞ்ச ஒழிப்பு துறை சோதனை - Agnipuratchi

அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் வீடுகளில் -லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

Share This

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவர்கள் தேர்வுத்தாள் மறுமதிப்பீடு செய்ததில் கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து அதில் தேர்ச்சி பெற்ற 90 ஆயிரம் மாணவர்களிடம் தலா ரூ.10 ஆயிரம் வீதம் லஞ்ச பணம் பெற்று மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் குற்றச்சாட்டுக்குள்ளான நபர்களின் வீடுகளில் 3 குழுவாக பிரிந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது வழக்கு தொடர்பான ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளது. பிரச்சினைக்குரிய மாணவர்களின் பெயர் பட்டியலும் சிக்கி உள்ளது. ஆவணங்களை ஆய்வு செய்தபோது, முறைகேடு தொடர்பாக நிறைய தகவல்கள் கிடைத்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages