கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு 2 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவின் தொடர் மழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய⚠ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடர் மழைப்பொழிவை அளித்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 1,50,000 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 50,000 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒகேனக்கலுக்கு தற்போது சுமார் 2,10,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கலில் 39வது நாளாக குளிக்க தொடர் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசல் இயக்கவும் 7வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒகேனக்கல்லுக்கு 2,10,000 கன அடி நீர் கர்நாடகாவில் இருந்து வருகை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment