கேரளாவிற்கு அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய தயார்-பிரதமர் மோடி - Agnipuratchi

கேரளாவிற்கு அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய தயார்-பிரதமர் மோடி

Share This

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேரளாவில் 50 ஆண்டுகளுக்கு இல்லாத அளவிற்கு கனமழை பெய்து மாநிலம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. கோடி கணக்கில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதோடு, 70க்கும் மேற்பட்ட உயிரிழப்பும் நேர்ந்துள்ளது. இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, இன்று காலை 2வது முறையாக பினராயி விஜயனை, மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது வெள்ளச் சேதங்கள் குறித்து கேட்டறிந்தார். தேவையான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தியதாக குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து, கேரள மாநில மக்களுக்காக பிரார்த்திப்பதாக மோடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages