காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் வர வாய்ப்பு மேட்டூர் அணைக்கு தொடர்ந்து கூடுதல் நீர்வரத்து இருப்பதால் காவேரி கரையோர மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
ஆறுகளின் கரையோரம் சென்று செல்ஃபி எடுக்க வேண்டாம்.
மேட்டூரில் திறக்கப்படும் நீருடன் பவானி, அமராவதி ஆறுகளின் நீர் கலக்கும். எனவே காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்.
தடைசெய்யப்பட்ட தரைப்பாலங்களை மக்கள் கடந்து செல்ல வேண்டாம் என - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறினார்.
No comments:
Post a Comment