சுதந்திர போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது தமிழகம் தான் - முதலமைச்சர் பழனிசாமி.
*சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் பதக்கங்கள் வென்றால் அல்லது சர்வதேச போடிகளில் கலந்து கொண்டால் தமிழக அரசின் பொதுதுறை நிறுவனங்களில் 2% உள் ஒதுக்கீடாக வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
*சென்னையில் பணிபுரியும் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த பெண்களுக்காக வக்ப் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் மகளிர் விடுதி அரசு நிதியுடன் கட்டப்பட உள்ளது.
*நடப்பாண்டில் பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 30 ஆயிரம் வீடுகளும், முதலமைச்சரின் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்
*தமிழக அரசின் சிறந்த பேரூராட்சிகளில் சேலம் ஜலகண்டாபுரம் முதலிடத்தை பிடித்துள்ளது தேனி பழனிசெட்டிபட்டி 2வது பரிசையும், தருமபுரி பாலக்கோடு பேரூராட்சி 3வது பரிசு வழங்கப்பட்டது.
*1.94 கோடி புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
அனைவருக்கும் தரமான கல்வியை அளிக்கவேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது
*ஜவுளித்துறையை மேம்படுத்த பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நடத்தப்படும் ஜவுளி தொழிலின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி 2 கோடி ரூபாய் செலவில் கோவையில் நடத்தப்பட உள்ளது.
*வெள்ளையர்களுக்கு எதிராக வேலூரிலிருந்து புரட்சி தொடங்கியதை எண்ணி பெருமை கொள்கிறேன் - முதல்வர் பழனிசாமி
No comments:
Post a Comment