முக்கொம்பு மேலணைக்கு ரூ.325 கோடியில் புதிய கதவணை-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - Agnipuratchi

முக்கொம்பு மேலணைக்கு ரூ.325 கோடியில் புதிய கதவணை-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

Share This

திருச்சி முக்கொம்பில் உள்ள அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், முக்கொம்பில் உடைந்த அணைக்குப் பதில் ரூ.325 கோடி மதிப்பில் புதிதாக கதவணை கட்டப்படும். இதேபோல் கொள்ளிடத்தின் வடக்கு பகுதியில் உள்ள அய்யன் வாய்க்காலில் 85 கோடி ரூபாய் மதிப்பில் கதவணை அமைக்கப்படும். இந்த கதவணைகளை 15 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். 
மேலும் பேசிய அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரால் கேரளாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நீர்மட்டத்தை குறைக்காததால் வெள்ளம் ஏற்படவில்லை. அங்குள்ள அனைத்து அணைகளில் இருந்தும் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா தவறான குற்றச்சாட்டை கூறுகிறது" என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages