பேராசிரியை நிர்மலா தேவியின் ஒப்புதல் வாக்குமூலம் - Agnipuratchi

பேராசிரியை நிர்மலா தேவியின் ஒப்புதல் வாக்குமூலம்

Share This

மாணவிகளை தவறான வழிக்கு அழைத்து செல்ல முயற்சித்தது உண்மை தான் என பேராசிரியை நிர்மலா தேவி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக சிபிசிஐடி பதில்மனு தாக்கல் செய்துள்ளது. சிபிசிஐடி கூடுதல் எஸ்பி லாவண்யா தரப்பில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முருகன், மற்றும் கருப்பசாமிக்காகவே மாணவிகளிடம் பேசியதாக நிர்மலா தேவி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி சிம் கார்டு, மெமரி கார்டு, லேப் டாப் உள்ளிட்ட 123 முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதவிர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி நிர்மலா தேவியின் குரல் மாதிரி சென்னை, மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் வழக்கை நடத்த சிறப்பு அரசு வழக்கறிஞராக ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages