பாத்திரங்கள் கொண்டு வந்தால் 5% தள்ளுபடி-சென்னை ஹோட்டல்கள் சங்கம் - Agnipuratchi

பாத்திரங்கள் கொண்டு வந்தால் 5% தள்ளுபடி-சென்னை ஹோட்டல்கள் சங்கம்

Share This

பார்சல் வாங்க வீட்டில் இருந்து பாத்திரங்களுடன் வருபவர்களுக்கு பில் தொகையில் 5% தள்ளுபடி செய்யப்படும் என சென்னை ஹோட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை என்ற அறிவிப்பு பலதரப்பட்ட மக்கள் இடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, உணவகங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம், சென்னை உணவகங்களில் பார்சல் வாங்க பாத்திரங்களை வாடிக்கையாளர்களே கொண்டு வந்தால் 5% தள்ளுபடி என்ற அறிவிப்பினை தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள், பிளாஸ்டிக் கொண்டு பார்சல் செய்வதற்கு பதிலாக பாக்கு மட்டை, கரும்பு சக்கை கொண்டு மாற்று வழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages