மீண்டும் மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றார் அருண் ஜெட்லி - Agnipuratchi

மீண்டும் மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றார் அருண் ஜெட்லி

Share This

சிறுநீரக அறுவை சிகிச்சை காரணமாக ஓய்வில் இருந்த அருண் ஜெட்லிக்கு மீண்டும் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியதையடுத்து, மத்திய நிதியமைச்சராக அருண் ஜெட்லி மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக, சிறுநீரக அறுவை சிகிச்சை காரணமாக கடந்த மே 14 ஆம் தேதியில் இருந்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஓய்வெடுத்து வந்தார். இதனால் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கூடுதல் பொறுப்பாக நிதியமைச்சகத்தை கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages