கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதியுதவி-பினராயி விஜயன் - Agnipuratchi

கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதியுதவி-பினராயி விஜயன்

Share This

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் கூறுகையில், நிவாரணம், மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக ஆலோசிக்க சிறப்பு பேரவை கூட்டத்தை கூட்ட ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளேன். ரூ.2600 கோடி அளவுக்கு நிவாரண உதவிகள் தேவைப்படுகிறது. மோடி ரூ.500 வழங்கியுள்ள நிலையில், சிறப்பு பிரதிகளுடன் டெல்லி சென்று மேலும் நிவாரண உதவி கேட்க உள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும், செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து முகாம்களில் உள்ள மக்கள் வீடு திரும்புவார்கள் என்று தெரிவித்த அவர் நிதியுதவி செய்து வரும் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages