கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. கனமழை பாதிப்பில் இருந்து மக்களை காக்க ராணுவம் மற்றும் கப்பற்படை உதவியை கேரள அரசு நாடியுள்ளது. 3 தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரும், கடலோர காவல்படை குழுவினரும் ஏற்கனவே கேரளா வந்தடைந்தனர். மீட்பு பணிகள் அங்கு துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.5 கோடிக்கு நிதியளிப்பதாகவும், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கேரள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளதோடு, வெள்ள நிவாரண பணிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நிதியுதவி-முதல்வர் அறிவிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment