பாராளுமன்றத்தில் 22 மொழிகளிலும் பேசலாம்-மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் - Agnipuratchi

பாராளுமன்றத்தில் 22 மொழிகளிலும் பேசலாம்-மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

Share This

பாராளுமன்றத்தில் இதுவரை, அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட 17 மொழிகளை ஒரே நேரத்தில் மொழி பெயர்ப்பதற்கான வசதி மட்டுமே இருந்து வந்தது. மீதமுள்ள காஷ்மீரி, டோங்ரி, கொங்கனி, சந்தலி, சிந்தி ஆகிய ஐந்து மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்ய முடியாத காரணத்தினால் அந்த மொழி பேசும் உறுப்பினர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். அவர்களுக்கு தனியே மொழி பெயர்க்க ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் "இந்திய அரசியலமைப்பு சட்டம் 8-வது அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள 22 மொழிகளில் எந்த மொழிகளிலும் உறுப்பினர்கள் இனி பேசலாம் என தெரிவித்துள்ளார். இதனை உறுப்பினர்கள் முன்னிலையில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages