கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் மு.க. முத்து - Agnipuratchi

கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் மு.க. முத்து

Share This

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 7ம் தேதி காலமானார். இதையடுத்து, மெரினாவில் இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தின் அருகே திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரது மறைவு அன்று நேரில் அவரை சந்தித்து அஞ்சலி செலுத்த முடியாத பிரபலங்களும், பொதுமக்களும் அவரது நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து இன்று கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினார். இவர், கருணாநிதியின் முதல் மனைவியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages