அண்ணா தொழிற்சங்க நிதி கையாடல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சின்னசாமி அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும், அண்ணா தொழிற்சங்கத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.. சின்னசாமியை சென்னை மாநகர குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அதிமுகவின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், அவப்பெயர் உண்டாகும் வகையில் செயல்பட்டதாலும், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். சின்னசாமி இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுக தொண்டர்கள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சின்னசாமி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை ஜூலை 27ம் தேதி வரை சிறையிலடைக்க எழும்பூர் மத்திய குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்ட சின்னசாமி கைது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment