கடந்த 9 வாரங்களாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவ குறிப்பு வெளியிட்டுள்ளது. அந்த மருத்துவ குறிப்பில், உயிர்காக்கும் கருவிகளின் துணையோடு தீவிர சிகிச்சை தொடர்வதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை முதலே பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்களும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். வாஜ்பாயின் உறவினர்களும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வீட்டு முன்பாக தொண்டர்கள் குவிவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள் அனைவரும் டெல்லிக்கு வருமாறு அக்கட்சியின் தலைமை அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment