விநாயகர் சதுர்த்தியையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, வாலாஜாபாத், உள்பட பல மாவட்டங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தாண்டு சிலை அமைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை குறித்து மாமல்லபுரத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது மாமல்லபுரம் டிஎஸ்பி. சுப்பாராஜு, இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், எஸ்ஐக்கள் கன்னியப்பன், தசரதன் ஆகியோர் கலந்துகொண்டு, விநாயகர் சிலை வைத்து வழிபடுவது, கரைப்பது குறித்த விதிமுறை பற்றி கூறுகையில் "பிளாஸ்டர் ஆப் பாரிஸ் எனப்படும் ரசாயன பொருட்களை கொண்டு செய்யப்படும் விநாயகர் சிலைகளை பொதுஇடங்களில் வைத்து வழிபடவும், கடலில் கரைக்கவும் தடை போடப்படுகிறது. பேப்பர் கூழ், களிமண் போன்ற சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ரசாயன விநாயகர் சிலைகளுக்கு தடை-போலீஸ் அறிவிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment