சென்னை மாநகர பேருந்துகளில் தானியங்கி ஒலிபெருக்கி - Agnipuratchi

சென்னை மாநகர பேருந்துகளில் தானியங்கி ஒலிபெருக்கி

Share This

சென்னையில் மாநகர பஸ்களில் பஸ் நிறுத்தத்தை அறிவிக்க தானியங்கி ஒலி பெருக்கி வசதி, ஜி.பி.எஸ். கருவிகள் விரைவில் பொருத்தப்படுகிறது. இதன் மூலம், ஒவ்வொரு பஸ் நிறுத்தங்கள் வரும்போது இந்த தானியங்கி ஒலி பெருக்கி தானாகவே அறிவிக்கும். ஜி.பி.எஸ். கருவி மூலம் இது செயல்படும் வகையில் அமைக்கப்படுகிறது. மின்சார ரெயில்களில் ஒவ்வொரு நிறுத்தங்கள் வரும்போது முன்கூட்டியே அறிவிப்புகள் வெளியாகும். அதுபோல மாநகர பஸ்களிலும் இந்த அறிவிப்புகள் வெளியாகும். பயணிகள் இந்த அறிவிப்பின் மூலம் தாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தங்களை எளிதில் தெரிந்துகொள்ளலாம். எந்தவித சிரமமும் இன்றி பயணம் மேற்கொள்ளலாம். தற்போது, போக்குவரத்து கழக செயலாளர் டேவிதார் இதற்கான வசதிகளை மாநகர பஸ்களில் அமல்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages