கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்துள்ளது. இதன் காரணமாக மெல்ல மெல்ல கேரளாவில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதுவரை ஏறக்குறைய 8 லட்சம் பேர் மீட்கப்பட்டு, 5645 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்படாமல், நீரில் தத்தளித்து வரும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும், நிவாரணம் வழங்கும் பணிகளுடன் சீரமைப்பு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் முதல்கட்டமாக, சேதமடைந்த 10 ஆயிரம் கி.மீ., தூரத்திலான சாலைகளை மட்டும் சீரமைக்க ரூ.4 ஆயிரத்து 441 கோடி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. 221 பாலங்கள் பழுதடைந்துள்ளன. இன்னும் 59 பாலங்கள் வெள்ளத்திற்கு அடியில் உள்ளன. வெள்ளத்தால் ஏராளமான மாணவர்களின் புத்தகங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. விரைவில் மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் ஓய்ந்தது மழை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment