மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட பாசனத்திற்காக, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் நீர்மட்டம் தற்போது 69 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 3 ஆயிரத்து 393 அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 60 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணை நிரம்பும் தறுவாயில் உள்ளதால் மதுரை, தேனி, திண்டுக்கல்,ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள ⚠அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தபடி, பெரியாறு பாசனப்பகுதி, திருமங்கலம் பிரதான கால்வாயின் ஒரு போக பாசனத்திற்காக இன்று நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பைப் பொறுத்து ஆயிரத்து 330 கன அடி வீதம் மொத்தம் 8 ஆயிரத்து 461 மில்லியன் கன அடிக்கு மிகாமல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment