பா.சிதம்பரத்தை கைது செய்ய தடை மேலும் நீட்டிப்பு - Agnipuratchi

பா.சிதம்பரத்தை கைது செய்ய தடை மேலும் நீட்டிப்பு

Share This

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீடு பெறவும் ப.சிதம்பரம் உதவியதாக குற்றச்சாட்டப்படுகிறது. இது தொடர்பான வழக்கில் ப.சிதம்பரம் திங்கட்கிழமை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை தடைவிதித்து ஜூலை 25ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, இந்த மனுவின் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த வழக்கினை மீண்டும் விசாரித்த நீதிமன்றம், சிதம்பரத்தை கைது செய்ய செப்டம்பர் 28ஆம் தேதி வரை தடையினை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages