உயிரை மாய்த்து கொள்ளாதீர்கள்-தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் - Agnipuratchi

உயிரை மாய்த்து கொள்ளாதீர்கள்-தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

Share This

கருணாநிதியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று கூறிய மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து தற்போது பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, "தொண்டர்களின் 'தலைவா வா' என்ற உணர்ச்சிமிகு முழக்கங்கள் வீண்போகவில்லை. தற்போது கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. மேலும் திமுக என்ற மாபெரும் இயக்கம், உடன்பிறப்புகள் தாங்கி நிற்கும் கோட்டை. உடன் பிறப்புகளில் ஒருவரை இழந்தால் கூட அது மனதை இடிபோல் தாக்குகிறது. திமுக தொண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது" என்று வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும் பேசிய அவர், கருணாநிதி உடல்நிலை குறித்து கவலையடடைந்து திமுக தொண்டர்கள் 21 பேர் உயிரிழந்தது கவலை அளிக்கிறது என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages