வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்க தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். கனமழையாலும், வெள்ளத்தாலும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள கேரள மக்களுக்கு, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வர்த்தகர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் பொருள்களாகவும், பணமாகவும் நிவாரணம் வழங்கி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக, தமிழ்நாடு ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் 250 பேர் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை நிவாரணமாக வழங்குவதென முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தங்கள் ஒருநாள் ஊதியத்தை கேரள மக்களின் நிவாரணத்துக்காக வழங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
கேரளாவுக்கு உதவ ஒரு நாள் ஊதியத்தை வழங்க முன்வந்த தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment