முக்கொம்பு மேலணை பாலம் உடைப்பு - Agnipuratchi

முக்கொம்பு மேலணை பாலம் உடைப்பு

Share This

முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் 8 மதகுகள் உடைந்ததால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை⚠ விடப்பட்டுள்ளது. திருச்சி-சேலம் சாலையில் வாத்தலை என்ற இடத்தில் முக்கொம்பு மேலணை உள்ளது. 182 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அணையில் தண்ணீர் திறப்பதற்காக 45 மதகுகள் உள்ளன. அதில், 8 மதகுகள் வெள்ளத்தால் உடைந்தன. இதனையடுத்து, அணையில் இருந்து சுமார் 90,000 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால், போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், அணையின் மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதை அடுத்து திருச்சி ஆட்சியர் ராசாமணி அங்கு ஆய்வுசெய்தார். மதகுகள் உடைந்ததால் மக்களுக்கு பாதிப்பில்லை என்று கூறிய அவர், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages