விசாரணைக்குழு அமைக்க பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை-தமிழக அரசு - Agnipuratchi

விசாரணைக்குழு அமைக்க பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை-தமிழக அரசு

Share This

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு, ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்யவேண்டும் என உத்தரவிட்டது⚖. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், இது போன்ற விசாரணை ஆணையம் அமைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த
மனுவினை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கும் என்று எதிர்பார்ப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages