திருச்சி மாவட்டம் முக்கொம்பில் 1836ம் ஆண்டு 45 மதகுகளுடன் கட்டப்பட்ட அணையின் 6லிருந்து 14 வரையிலான ஒன்பது மதகுகளும் கடந்த 22ம் தேதி உடைந்தன. மேலும் அந்த மதகுகளை தாங்கி நின்ற 8 தூண்களும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்நிலையில் தற்காலிக பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், ஒன்பது மதகுகள் உடைந்ததையடுத்து மற்ற மதகுகளின் உறுதிதன்மையை ஆய்வு செய்யும் விதமாக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுப்பணித்துறையினர் வலியுறுத்தினர். இதனையடுத்து சென்னை ஐஐடி பேராசிரியர் சுந்தரவடிவேலு என்பவர் தலைமையில் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டதையடுத்து, ஆழ்கடலில் நீந்தும் பயிற்சி பெற்ற தனியார் கட்டுமான நிறுவன வீரர்கள் 3 பேர் ஆய்வு செய்தனர். சோதனையில் மற்ற மதகுகளும் வலுவிழந்து காணப்படுவதாகவும், அடிப்பகுதியில் விரிசல் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்கள். இதனால் முக்கொம்பு அணை முற்றிலும் இடிந்து விழுமோ என பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
முக்கொம்பு அணையில் மற்ற மதகுகளும் உடையும் நிலையில் உள்ளது-அதிர்ச்சி தகவல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment