நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தும் வசதியை ஏற்படுத்த 4 மாதம் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவாகரத்து வழக்கின் விசாரணையை காணொலி காட்சி மூலம் நடத்த கோரி சென்னை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் 233 நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தும் வசதியை ஏற்படுத்த 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வசதியை ஏற்படுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதையடுத்து, தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதி ஏற்படுத்த 4 மாத காலம் அவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதி-அவகாசம் அளித்த உயர்நீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment