மதுரையில் 80க்கும் மேற்பட்ட மயில்கள் மர்ம சாவு - Agnipuratchi

மதுரையில் 80க்கும் மேற்பட்ட மயில்கள் மர்ம சாவு

Share This

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் 80க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்துகிடப்பது தெரிய வந்துள்ளது. மதுரையை மாட்டுத்தாவணி அருகே உள்ள உத்தங்குடியை அடுத்த மருதங்குளத்தில் உள்ள கால்வாயை ஒட்டி தென்னந்தோப்புகளும் விவசாய நிலங்களும் உள்ளன. பசுமையான இப்பகுதியில் ஏராளமான மயில்கள், காடைகள் உள்ளிட்ட பறவைகள் உலவுவது வழக்கம். இந்நிலையில், தினமும் அப்பகுதியில் உள்ள மயில்களுக்கு உணவளிக்கும் ஒருவர் இன்று காலை அங்கு சென்றபோது ஆங்காங்கே ஏராளமான மயில்கள் செத்துக்கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததையடுத்து அவர்கள் அங்கு வந்து ஆய்வு செய்தனர். மயில்கள் தவிர காடைகளும் வேறு சில பறவைகளும்கூட இறந்துள்ளன. அப்போது அங்கு சிதறி கிடந்த நெல்களை சோதித்த போது அதில் விஷம் இருந்தது தெரியவந்தது. தற்போது இது குறித்த தீவிர விசாரணையில் போலீசும், வனத்துறை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளார்கள். 
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages