இந்தியா சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மும்பை ஐஐடியில் நடைபெற்ற 56-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர், சுதந்திர இந்தியாவில் வசிக்கும் நல்வாய்ப்பை நாம் பெற்றுள்ளதாக தெரிவித்தார். உலகம் முழுவதும் சென்று இந்தியர்கள் முத்திரை பதித்து வருவதாகவும் அவர் கூறினார். இந்தியா தகவல் தொழில்நுட்பத்துக்கான மிகப்பெரிய களமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார். மிகச்சிறந்த மாற்றங்கள், அரசாங்கத்தின் முயற்சியால் மட்டுமே வருவதில்லை என்றும், இளைஞர்கள் மூலமே அது சாத்தியமாவதாகவும் பிரதமர் கூறினார்.
தொழில்நுட்பத்துறையில் உலக அரங்கில் இந்தியா சிறந்து விளங்க ஐஐடி கல்வி மையங்களே காரணமாக உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். மும்பை ஐஐடிக்கு மத்திய அரசு சார்பில் ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment