பாலாறு–பெண்ணையாறு இணைப்புக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் - Agnipuratchi

பாலாறு–பெண்ணையாறு இணைப்புக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல்

Share This

பாலாறு பெண்ணையாறு நதிகளை இணைக்க மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்திருப்பதால், கிருஷ்ண கிரி, தர்மபுரி, வேலூர், திருவண் ணாமலை உட்பட 7 மாவட்ட மக்களுக்கு குடிநீர் வசதியும் லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்களின் பாசன வசதியும் மேம் படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் பாலாறு, பெண்ணையாறு ஆகியவை வங்கக்கடலில் வீணாக சங்கமிக்கின்றன. கடலில் வீணாகும் நீரை திசைதிருப்பி பயன்படுத்த ஆறு ஆண்டுகளாக ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வின் முடிவில் தற்போது இரு நதிகளை இணைக்கும் திட்டத்தினை ரூ.648 கோடி செலவில் அமைக்க ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு குடிநீர் வசதி மற்றும் 9 ஆயிரத்து 850 ஹெக்டர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages