18 எம்எல்ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கை மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் கடந்த மாதம் 23ஆம் தேதி முதல் விசாரித்து வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் வாதாடினார். இதனையடுத்து நேற்று முதலமைச்சர் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், இன்றைய விசாரணையில், அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை மாற்றாததால் தகுதி நீக்கம் பரிந்துரைத்தேன்' என்று அரசு கொறடா கூறினார். மேலும், சபாநாயகர் அதிகாரத்தில் தலையிட நீதிமன்றத்துக்கு வானளாவிய அதிகாரம் இல்லை என்று அரசு கொறடா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு கொறடா சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடினார். முதல்வர், சபாநாயகர், அரசு கொறடா ஆகியோர் தரப்பு வாதம் இன்றோடு முடிவடைந்ததையடுத்து, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கை ஆக.16க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment