முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தற்காலிக தடுப்பு அமைக்கும் பணி தீவிரம் - Agnipuratchi

முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தற்காலிக தடுப்பு அமைக்கும் பணி தீவிரம்

Share This

திருச்சி முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தற்காலிக தடுப்பு அமைக்கும் பணி இன்னும் 4 நாட்களில் நிறைவடையும் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். முக்கொம்பு அணையில் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் 8 தூண்களும் 9 மதகுகளும் இடிந்து விழுந்ததை அடுத்து, மணல் மூட்டைகளால் தற்காலிக தடுப்பு அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு 24 மணி நேரமும் நடைபெற்று வருகின்றன. தொடக்கத்தில் 300 தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது 800 தொழிலாளர்கள் மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ராசாமணி, 5 அடி உயரம் கொண்ட தடுப்பு அமைக்கும் பணி 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages