விரைவில் என்னுடைய முழு பலத்தை நிரூபிப்பேன், மு.க.அழகிரி திட்டவட்டம்! - Agnipuratchi

விரைவில் என்னுடைய முழு பலத்தை நிரூபிப்பேன், மு.க.அழகிரி திட்டவட்டம்!

Share This

பிரபல நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள மு.க.அழகிரி, செப்டம்பர் 5 - ம் தேதி கருணாநிதி நினைவிடத்தை நோக்கி பேரணி நடைபெறுகிறது. அதில் 75 ஆயிரம் பேரிலிருந்து 1 லட்சம் பேர் வரை பங்கேற்பர்.

என் பின்னால் பாஜக உள்ளிட்ட யாரும் இல்லை. கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் என் பக்கம் தான் உள்ளனர். அதை செப்டம்பர் 5 - ம் தேதி நடைபெறும் பேரணியில் நிரூபித்துக்காட்டுவேன். அதற்கு பிறகும் எதிர்காலத்தில் என் பலத்தை நிரூபித்துக்காட்டுவேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் ரஜினிகாந்துடன் எதிர்காலத்தில் இணைந்து செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த மு.க.அழகிரி, ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அரசியலில் பின்னால் நடப்பதையெல்லாம் இப்போதே சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். தனிக்கட்சி தொடங்கும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், கருணாநிதி என்ன நினைத்தாரோ அதன்படி செயல்படுவேன். அவர் என்னிடம் கடைசியாகக் கூறிய வார்த்தைகள் இருக்கின்றன. அதை வெளியில் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages