புதிய தலைமை செயலகம் கட்டிய விவகாரம்-உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு - Agnipuratchi

புதிய தலைமை செயலகம் கட்டிய விவகாரம்-உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Share This

ரகுபதி ஆணையத்தை சஸ்பெண்ட் செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில், கடந்த தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம் கட்டிடம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் கூறியதால், உயர் நீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணைக் கமிஷனை எதிர்த்து தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டு கமிஷன் விசாரணைக்கு கடந்த 2015 மார்ச் 12ம் தேதி தடை பெறப்பட்டது. இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதையடுத்து, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கமிஷனனின் செயல்பாடுகள் இல்லாத நிலையில் பொதுமக்களின் பணம் தான் வீணடிக்கப்படுகிறது என்று கூறிய நீதிமன்றம், கமிஷன் இதுவரை 88 மாதங்கள் செயல்படமால் இருந்துள்ளது என்பதனை சுட்டிக்காட்டி, நீதிபதி ரகுபதி கமிஷனுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages