8 வழி பசுமைச்சாலைக்காக ஊத்துமலையை துளையிட்டு மண் பரிசோதனை நடத்தும் அதிகாரிகள் - Agnipuratchi

8 வழி பசுமைச்சாலைக்காக ஊத்துமலையை துளையிட்டு மண் பரிசோதனை நடத்தும் அதிகாரிகள்

Share This

சேலத்தில் இருந்து சென்னை வரை அமைய இருக்கும் 8 வழி பசுமை விரைவுச்சாலைக்கு ஊத்துமலையை துளையிட்டு மண் பரிசோதனை நடத்தும் பணியில் அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சேலத்தில் இருந்து சென்னை வரை 8 வழி பசுமை விரைவு சாலை அமைக்க மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கி உள்ளது. சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக செல்லும் இந்த சாலைக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும், சேலத்தில் ஜருகுமலை, ஊத்துமலை உள்பட 3 மலைகள் வழியாக சாலை அமைக்கப்பட இருப்பதால், இந்த மலைகளை குடைந்து அதன் உறுதித்தன்மையை அறியும் வகையில் மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதற்காக பெங்களூருவில் இருந்து வரவழைக்கப்பட்ட நிபுணர் குழுவினர், ஊத்துமலை மேற்பகுதியில் இருந்து கடந்த மாதம் 23ம் தேதி முதல் பணிகளை தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages