கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்த அரசியல் தலைவர்கள் - Agnipuratchi

கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்த அரசியல் தலைவர்கள்

Share This

பிரதமர் மோடி : "நாட்டின் பெரும் தலைவர்களுள் ஒருவர் கருணாநிதி. சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், மக்கள் விரும்பும் தலைவராக திகழ்ந்தவர். அவரது மறைவை கேட்டு துயரத்தில் ஆழ்ந்தேன்" என்று பதிவு செய்துள்ளார். மேலும் நாளை 10.30 மணியளவில் சென்னை வருகிறார்.
 
ஜனாதிபதி : நம் வாழ்வில் வல்லமை மிக்க மரபினை விட்டு சென்றிருக்கிறார் கருணாநிதி. அவரது மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். 

துணை ஜனாதிபதி : இந்தியாவின் மிக மூத்த அரசியல் ஆளுமையான கருணாநிதியின் மறைவால் துயரம் அடைந்தேன் 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி : தமிழக அரசியலில் 60 ஆண்டுகால ஆதிக்க சக்தியாக விளங்கியவர் கருணாநிதி. சிறந்த மகனை நாடு இழந்துவிட்டது. 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும் 

ராமதாஸ் : அன்பு நண்பர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மறைவு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும், துயரத்தையும் அளிக்கிறது. கலைஞரின் மறைவு தமிழக அரசியலுக்கும், கலை உலகுக்கும் உண்மையாகவே ஈடு செய்ய முடியாத இழப்பு. கண்ணீருடன் நான். 

பொன்.ராதாகிருஷ்ணன் : கருணாநிதியின் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது 

விஜயகாந்த் : இந்த யுகத்தின் ஈடு இணையில்லா ஒப்பற்ற தலைவர் கருணாநிதி. அவர் காலமான செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன். தமிழுக்கு ஆற்றிய தொண்டு, பழகும் தன்மை, நட்புணர்வு, ஐந்து முறை முதல்வராக இருந்த வரலாறு, அவரது நினைவுகள் காலத்தால் அழியாதது. 

கேரள முதல்வர் : இந்திய அரசியல்வாதிகளில் தலைசிறந்தவர் கருணாநிதி. அவரது பங்களிப்பு அரசியலோடு மட்டும் நின்றுவிடவில்லை" என்று கூறியுள்ளார்.

திருமாவளவன் : சமூக நீதியை காக்க தனது கடைசி மூச்சு வரை போராடியவர் கருணாநிதி. 

அமெரிக்க தூதர் கென் ஜெஷ்னர் : அமெரிக்க தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் கருணாநிதி ஆற்றிய சேவைகள் நினைவு கூரப்படும் 

மன்மோகன் சிங் : தமிழர்களுக்காக ஓய்வின்றி உழைத்தவர். தேசிய அளவிகல் இவரது பங்களிப்பை யாராலும் மறக்க இயலாது. 

ராஜ்நாத் சிங் : கருணாநிதியின் மறைவுக்கு நாடே துக்கம் அனுசரிக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages