ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் 49 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார் இந்தியாவின் அமித் பங்கல்.
ஆசிய விளையாட்டு போட்டி: பிரிட்ஜ் ஆடவர் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றது இந்தியா.
ஆசிய விளையாட்டு போட்டியில் பிரிட்ஜ் எனப்படும் சீட்டு விளையாட்டு போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
இந்தியாவின் பிரணாப் பார்த்தன், சிவ்நாத் சர்க்கார் ஜோடி தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முறையாக 66 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை.
ஆசிய விளையாட்டு போட்டிகளில்14 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் என 66 பதக்கங்களை வென்று இந்தியா 8வது இடத்தில் உள்ளது.
ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் சரத் கமலுக்கு ரூ20 லட்சம் ஊக்கத்தொகை மற்றும் பாய்மர படகு குழு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வருண் தக்கர் மற்றும் கணபதி ஆகியோருக்கு தலா ரூ20 லட்சம் ஊக்கத்தொகை -முதலமைச்சர்.
No comments:
Post a Comment