தெலுங்கானாவில் நலகொண்டா அருகே ரசிகரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிய போது கார்விபத்தில் சிக்கி உயிரிழந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் மகன் ஹரிகிருஷ்ணா காரில் இருந்து தூக்கி வீசப்பட்டார். தலையில் படுகாயம் அடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஹரிகிருஷ்ணாவின் உடலுடன், மருத்துவமனை ஊழியர்கள் 4 பேர் செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த போட்டோவை சமூக வலைதளங்களிலும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். மருத்துவமனை ஊழியர்களின் இந்த மனிதாபிமானமற்ற செயலையும், மருத்துவமனையையும் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த போட்டோவை யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கண்டனங்களும், எதிர்ப்புக்களும் குவிந்து வருவதை அடுத்து மருத்துவமனை ஊழியர்கள் 4 பேரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் இந்த செயலுக்காக மருத்துமனை நிர்வாகம் மன்னிப்பு கோரி உள்ளது.
No comments:
Post a Comment