குட்கா வழக்கில் கைதானவர்களுக்கு 20ம் தேதி வரை சிபிஐ காவல் - Agnipuratchi

குட்கா வழக்கில் கைதானவர்களுக்கு 20ம் தேதி வரை சிபிஐ காவல்

Share This

குட்கா விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் குட்கா தயாரிப்பாளரான மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ் மற்றும் குட்கா விற்பனை செய்யவும், தயாரிக்கவும் ஒத்துழைத்த மத்திய கலால் துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோரை கடந்த 6ம் தேதி அதிரடியாக கைது⛓ செய்து சிறையில் அடைத்தார்கள். பின்னர் இந்த வழக்கில் மேலும் யார் யாருக்கு தொடர்புள்ளது என்று அறிந்து கொள்ள, சிபிஐ அதிகாரிகள் சிறையில் உள்ள 5 பேரையும் 4 நாள் சிபிஐ காவலில் எடுத்தனர். 5 பேரின் 4 நாள் சிபிஐ காவல் முடிந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பப்பட்டனர். இந்நிலையில் உமா சங்கர், செந்தில், பாண்டியன் ஆகியோருக்கு 20ம் தேதி வரை சிபிஐ காவல் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages