பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், வன்னியர் சங்கத்தின் நிரந்தரத் தலைவருமான மாவீரன் ஜெ.குரு அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவரது முழு உருவச் சிலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பம் வன்னியர் கல்வி அறக்கட்டளை வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. அச்சிலைத் திறப்பு நிகழ்ச்சி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
கோனேரிக்குப்பம் வன்னியர் கல்வி அறக்கட்டளை வளாகத்தில் 16&ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் மாவீரன் அவர்களின் முழு உருவச் சிலையை பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் திறந்து வைக்க உள்ளார். மாவீரன் குரு அவர்களின் பெயர் சூட்டப்பட்ட சட்டக்கல்லூரி வளாகத்தை பா.ம.க. இளைஞரணித் தலைவரும், அறக்கட்டளை செயலாளருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் திறந்து வைக்கவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு பா.ம.க. தலைவராகிய நான் தலைமையேற்கிறேன்.
சிலைத் திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் சிலைத் திறப்பு நிகழ்ச்சி வெற்றி பெறுவது நமது சொந்தங்களாகிய உங்கள் கைகளில் தான் உள்ளது. சிலைத் திறப்பு நிகழ்ச்சிக்கு வரும் பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் தாங்கள் புறப்படும் இடத்தில் இருந்து விழா நடைபெறும் இடம் வரை போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் வந்து செல்ல வேண்டும். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வாகனம் கூட நிறுத்தப்படக்கூடாது.
No comments:
Post a Comment