ஒகேனக்கல் நீர்வரத்து 29 ஆயிரம் கனஅடியாக உயர்வு - Agnipuratchi

ஒகேனக்கல் நீர்வரத்து 29 ஆயிரம் கனஅடியாக உயர்வு

Share This

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் வழக்கத்தைவிட தென்மேற்குப் பருவமழை அதிகளவில் பெய்ததால், கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. சில வாரங்களாக மழை குறைந்திருந்த நிலையில், மீண்டும் மழை பெய்ததால் கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கலுக்கு காவிரியில் நீர்வரத்து 29 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நாளைக்குள் இந்த நீர் மேட்டூர் அணையை சென்றடையும் என்பதால் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages