2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடங்கள் வழங்க தடை விதிக்க அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதா⁉ என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா⁉ என அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பியதோடு, மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப தவறினால் நீதிமன்ற அவமதிப்பு என உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது என்றும் இரண்டாம் வகுப்பு வரை இரு பாடங்களும், 3 முதல் ஐந்தாம் வகுப்பு வரை நான்கு பாடங்களும் மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளதை பின்பற்ற வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடங்கள் வழங்க தடை-உயர்நீதிமன்றம் கேள்வி⁉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment