நாகை மாவட்டம்-ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது பெண் குழந்தை மீட்பு - Agnipuratchi

நாகை மாவட்டம்-ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது பெண் குழந்தை மீட்பு

Share This

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புதுப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கார்த்தி என்பவரது மகள் சிவதர்ஷினி (வயது 2½). நேற்று கார்த்தியின் வீட்டின் முன்பு குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி எந்திரம் மூலமாக நடந்தது. 15 அடி ஆழம் தோண்டப்பட்ட நிலையில் மதியம் 2 மணி அளவில் கிணறு தோண்டிய பணியாளர்கள் சாப்பிட சென்றனர். அப்போது பலகையால் ஆழ்துளை கிணறு மூடப்பட்டிருந்தது. அப்போது அதில் எதிர்பாராத விதமாக சிவதர்ஷினி உள்ளே விழுந்தார். இதையடுத்து ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட குழாயை வெட்டி எடுத்த தீயணைப்பு படைவீரர்கள், 15 அடி ஆழத்தில் சிக்கி இருந்த குழந்தையை பத்திரமாக உயிருடன் மீட்டனர். கிணற்றில் விழுந்ததால் அதிர்ச்சியில் உறைந்திருந்த அந்த குழந்தை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த குழந்தைக்கு டாக்டர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்ததை தொடர்ந்து குழந்தை நலம் அடைந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages