பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார். மணலி அருகே பொது வியாபாரிகள் சங்க மாளிகை திறப்பு விழா நடந்தது. அதனை திறந்து வைத்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், செய்தியாளர்களிடம் பேசுகையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை பாதியாக குறைக்கவேண்டும். பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தினால் லாரிகளின் வாடகை உயர்ந்துள்ளது. இதனால் விலைவாசி உச்சத்தை தொட்டு மக்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். விரைவில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வணிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலையுயர்வை கண்டித்து மாபெரும் போராட்டம்-வெள்ளையன்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment