நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு மாணவர்களை தகுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்காக பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடந்த ஆண்டு நடந்த பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் 30 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். இந்நிலையில் மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் தமிழகத்தில் இந்த ஆண்டு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் 412 மையங்களில் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 10 மையங்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. சென்னையில் அளிக்கப்படும் பயிற்சி செயற்கை கோள் மூலம் 412 மையங்களிலும் ஒளிபரப்பாகிறது.
No comments:
Post a Comment