கோவையில் உள்ள முக்கியமான இந்து அமைப்புத் தலைவர்களைக் கொலை செய்ய வேண்டுமென ஒரு கும்பல் திட்டமிடுவதாகவும் அந்தக் கும்பல் சென்னையிலிருந்து கொச்சின் செல்லும் ரயிலில் பயணித்து கோவைக்கு வந்துகொண்டிருப்பதாகவும் கடந்த 1ம் தேதி, போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், கோவை வந்து இறங்கிய ஐந்து பேர் கொண்ட கும்பலை பிடித்து விசாரித்தது போலீஸ். அதனையடுத்து, கோவை என்.எச் ரோட்டை சேர்ந்த ஆஷிக், வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி (29), திண்டிவனத்தைச் சேர்ந்த இஸ்மாயில் (25), பல்லாவரத்தை சேர்ந்த சம்சுதீன் (20), சென்னையைச்சேர்ந்த சலாவூதீன் ஆகிய ஐந்து பேர் மீதும் கடந்த 2ம்தேதி, வழக்குப்பதிவு செய்தது. இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் அந்த கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தி பேசி வருவதால் தான் அவர்களை கொல்ல திட்டமிட்டோம் என்று அவர்கள் 5 பேரும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள் என்பது குறிபிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
இந்து மக்கள் கட்சித் தலைவர் மற்றும் நிர்வாகிகளை கொலை செய்ய திட்டமிட்ட 5 பேர் கைது
இந்து மக்கள் கட்சித் தலைவர் மற்றும் நிர்வாகிகளை கொலை செய்ய திட்டமிட்ட 5 பேர் கைது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment