7 பேரின் விடுதலை விவகாரம்-விசாரணையினை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் - Agnipuratchi

7 பேரின் விடுதலை விவகாரம்-விசாரணையினை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

Share This

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு முழு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து தமிழக அரசு ஆளுநரிடம் இது குறித்து பரிந்துரை செய்தது. இந்நிலையில், 2014ம் ஆண்டே இந்த விடுதலை குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதன் விசாரணை இன்று நடந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜராகவேண்டிய வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. எனவே விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. மேலும் இது குறித்து கூடுதல் ஆவணங்களை சேர்த்து புதிய மனுக்களை மூன்று வாரங்களுக்குப் பிறகு தாக்கல் செய்ய வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages