சுற்றுசூழல் அனுமதி இல்லாமல் 8வழிச்சாலை திட்டம் அமலாகாது-மத்திய அரசு - Agnipuratchi

சுற்றுசூழல் அனுமதி இல்லாமல் 8வழிச்சாலை திட்டம் அமலாகாது-மத்திய அரசு

Share This

சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் சுற்றுச்சூழல் மதிப்பீடு ஆய்வு செய்யாமல் செயல்படுத்தப்படுவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த முறை விசாரணையின் போது, 8 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டப்படுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்பின், திட்டத்துக்கு நிலம் கையப்படுத்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், சாலைக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக 1200 மரங்கள் நட இருய்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறாமல் சட்டப்படி திட்டத்தை தொடர முடியாது, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி அவசியம் என மத்திய அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்த கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages