சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு-மக்கள் அவதி - Agnipuratchi

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு-மக்கள் அவதி

Share This

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலும் அதே போல டி.எம்.எஸ். முதல் விமான நிலையம் என இரண்டு வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் சென்னையில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த இரண்டு வழித்தடத்திலும் கடந்த 2 மாத காலமாகவே மெட்ரோ ரயில் சேவை அடிக்கடி தடை படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு வழித்தடத்திலும் இயங்கும் மெட்ரோ ரயில்கள் தானியங்கி கருவிகள் மூலம் இயங்கக்கூடியது. இந்த இரண்டு வழித்தடத்தில் முழுவதுமாக சிக்னல் கோளாறு காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர். எனினும் இந்த தகவலை உறுதியான தகவலாக கொடுப்பதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்து வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages