நடிகர் கருணாசுக்கு எம்.எல்.ஏ வுக்கு ஜாமீன் - Agnipuratchi

நடிகர் கருணாசுக்கு எம்.எல்.ஏ வுக்கு ஜாமீன்

Share This

முதல்வர், காவல்துறையை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ கருணாசுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. கருணாஸுக்கு ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, தமிழக முதல்வர் மற்றும் போலீசாரை அவதூறாக பேசினார். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைலானதையடுத்து, அவர் கைது⛓ செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் ஒன்றுக்கு இன்று ஜாமீன் வழங்ப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை அக்டோபர் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து அவர் வேலூர் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages